முகவுரை
சில தமிழ்ச் சொற்களுக்கும், பழமொழிகளுக்கும் விளக்கமோ, மூலமோ
சரியாகக் கிடைப்பதில்லை. என் சிந்தனையில் இந்த மாதிரி சில
சொற்களுக்கும், பழமொழிகளுக்கும் இப்படி (சற்று மாறான, புதிய) விளக்கம் இருக்குமோ என்று தோன்றுகிறது. அவற்றை இங்கு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
உதாரணங்கள்:
1) சில சொற்கள்/சொற்றொடர்கள்:
அக்கு வேறு, ஆணி வேறு
கொள்ளுத் தாத்தா/பாட்டி/ பெயரன்/பெயர்த்தி (பேத்தி)
2) பழமொழிகள்:
அதிகப் படித்த மூஞ்சூறு காடிப்பானையில் விழுந்ததாம்.
குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவன்
****************
நான் கூறப் போவன ஆராய்ச்சி என்று சொல்ல முடியாது. என் மனத்தளவில்
ஆழ்ந்து சிந்தித்து கிடைத்த செய்திகளே. தமிழ் மொழியைத் தாய்மொழியாகக்
கொண்டு, தமிழ் ஆர்வத்துடன் வளர்ந்த ஒருவன் என்பதைத் தவிர எனக்கு இவ்வாறு வழக்குச் சொற்களுக்கு விளக்கம் சொல்ல வேறு தகுதி ஒன்றும் கிடையாது. அதனால்தான் ”இப்படியும் இருக்கலாமோ” என்று தலைப்பிட்டேன்.

தங்கள் தமிழறிவை உலகெங்கும் பரப்ப, எனது ஒத்துழைப்பு என்றும் இருக்கும்.
ReplyDeleteநண்பரே,
Deleteவருகைக்கு நன்றி! தங்களைப் போன்றோர் உதவி என்போன்றோருக்கு மிகவும் தேவை.